ADDED : நவ 09, 2024 10:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக காவல் துறையில் ஒரே நாளில், 2,153 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்டம் விட்டு மாவட்டம், மாநகரம் விட்டு மாநகரம் பணியிட மாற்றம் வேண்டும் என, டி.ஜி.பி.,யிடம் போலீசார் மனு அளித்தனர். அவர்களில் தகுதி உடையவர்களை கண்டறிந்து, முதல்நிலை போலீசார், தலைமை காவலர், சிறப்பு எஸ்.ஐ., போன்ற நிலையில் பணியாற்றும், 2,153 பேரை பணியிட மாற்றம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.