sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்

/

ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்

ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்

ரூ.85,512 கோடியில் 2,170 கி.மீ., துாரம் தமிழகத்தில் புதிதாக 25 நெடுஞ்சாலைகள்


ADDED : செப் 19, 2024 10:56 PM

Google News

ADDED : செப் 19, 2024 10:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழகத்தில், 25 புதிய சாலைகள் அமைக்கும் பணிகளை, 85,512 கோடி ரூபாயில் துவங்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

தமிழகத்தில், 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த சாலைகள், சரக்கு மற்றும் பயணியர் போக்குவரத்துக்கு பெரிதும் உதவி வருகின்றன. இதன் வாயிலாக, மாநிலத்தின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.

இந்த சாலைகள் வழியாக பயணிக்கும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 67 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள சாலைகளை, தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி புறவழிச்சாலை, புதிய தேசிய நெடுஞ்சாலைகள், உயர்மட்ட மேம்பால சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு, 2,170 கி.மீ.,க்கு 25 புதிய சாலை பணிகளை அடுத்தாண்டு துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இப்பணிக்கு, 85,515 கோடி ரூபாய் தேவைப்படும் என, தோராயமாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசு பொறுப்பேற்ற பின், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சாலை பணிகளுக்கு போதிய அளவில் நிதி ஒதுக்க முடியவில்லை. அடுத்த ஐந்து மாதங்களில் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

அப்போது, தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ள சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்படும். அதை மனதில் வைத்து, 25 புதிய சாலைகளுக்கு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பு பணி நடக்கிறது.

இப்பணிகளை அடுத்தாண்டு திட்டமிட்டபடி துவங்க, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை - திருச்சி - மதுரை எட்டுவழி சாலை


சென்னை - சேலம் இடையே எட்டுவழிச்சாலை அமைப்பதற்கு, அ.தி.மு.க., ஆட்சியில் நில எடுப்புப் பணிகள் துவங்கின. இதற்கு விவசாயிகள், எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இச்சாலை பணிக்கு மீண்டும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர்கள், இதற்கான பணிகளை துவங்க வேண்டும். இதனால், திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. இந்த சாலை பணியை அடுத்தாண்டு துவக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆர்வமாக உள்ளது.அது மட்டுமின்றி, சென்னை - திருச்சி - மதுரை இடையே, பசுமைவழிச்சாலை அமைக்கவும் திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடக்கிறது. தற்போதுள்ள, சென்னை - திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக, புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கு நிலம் கையகப்படுத்த அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.



திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும் சாலைகள் விபரம்


சாலை நீளம் தேவைப்படும் நிதி ரூபாயில்கிளாம்பாக்கம் மகேந்திரா சிட்டி ஆறுவழி மேம்பாலச்சாலை 18 கி.மீ., 2,950 கோடிஸ்ரீபெரும்புதுார் மதுரவாயல் ஆறு வழி மேம்பாலச்சாலை 23 கி.மீ., 3,780 கோடிசென்னை திருச்சி மதுரை பசுமை வழிச்சாலை 470 கி.மீ., 26,500 கோடிசென்னை சேலம் பசுமை வழிச்சாலை 277 கி.மீ., 9681 கோடிகல்லகம் மீன்சுருட்டி நான்கு வழி புறவழிச்சாலை 7.2 கி.மீ., 356 கோடிகடலுார் துறைமுக இணைப்பு நான்கு வழிச்சாலை 1.4 கி.மீ., 62.8 கோடிகரூர் கோவை ஆறுவழிச்சாலை ரிங் ரோடு இணைப்பு 182 கி.மீ., 7,565 கோடி.
குமாரபாளையம் செங்கப்பள்ளி எட்டு வழிச்சாலை 102 கி.மீ., 1,373 கோடிதர்மபுரி நாமக்கல் எட்டு வழிச்சாலை சேலம் பைபாஸ் இணைப்பு 124 கி.மீ., 1,690 கோடிகும்பகோணம் சீர்காழி நான்கு வழிச்சாலை 42 கி.மீ., 1,174 கோடிராமநாதபுரம் துாத்துக்குடி நான்கு வழிச்சாலை 134 கி.மீ., 4,915 கோடிநாகப்பட்டினம் ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை 174 கி.மீ., 7,090 கோடிசெங்கோட்டை குற்றாலம் பாலருவி நான்கு வழிச்சாலை 12.7 கி.மீ., 1,430 கோடிதிருச்சி காரைக்குடி நான்கு வழிச்சாலை 81.5 கி.மீ., 1,700 கோடிநாகப்பட்டினம் தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை 77.7 கி.மீ., 1,510 கோடிதிண்டுக்கல் தேனி குமுளி நான்கு வழிச்சாலை 133 கி.மீ., 3,000 கோடி.
தஞ்சாவூர் கைக்குறிச்சி நான்கு வழிச்சாலை 51.8 கி.மீ., 1,238 கோடிகைக்குறிச்சி பிள்ளையார்பட்டி சாலை விரிவாக்கம் 33.7 கி.மீ., 929 கோடிதஞ்சாவூர் திருச்சி ஆறு வழிச்சாலை 56.4 கி.மீ., 1,371 கோடிதிருச்சி துவாக்குடி ஆறு வழிச்சாலை 15.4கி.மீ., 3,000 கோடிதிருச்சி கரூர் ஆறு வழிச்சாலை 79.1 கி.மீ., 2,579 கோடிகொட்டம்பட்டி திருப்பத்துார் நான்கு வழிச்சாலை 33 கி.மீ., மதிப்பீடு தயாராகிறது.
திருச்சி கரூர் சாலை நிலுவைப் பணி 19.9 கி.மீ., 1,616 கோடி*இவற்றுடன் திருச்சி கரூர் இரு வழிச்சாலையை, 3 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி, திருச்சி பைபாஸ் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி என மொத்தம் 25 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.








      Dinamalar
      Follow us