ADDED : நவ 19, 2025 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தேசிய, மாநில நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளிக்கூடங்கள் அமைந்துள்ள நெடுஞ்சாலைகளில் நெரிசலுக்கு தீர்வாக, பொது கட்டட விதிகளில் பள்ளிகளுக்கான பிரிவில், சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, தேசிய, மாநில நெடுஞ்சாலையை ஒட்டி பள்ளி வளாகங்கள் அமைக்கும்போது, அங்கு, 22 அடி அகலத்துக்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்.
நெடுஞ்சாலையில் இருந்து வாகனங்கள், சர்வீஸ் சாலைக்கு வந்து செல்ல, நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் இருக்க வேண்டும்.
இந்த நுழைவு அமைப்புகள், 29 அடி முதல், 39 அடி அகலத்துக்கு இருக்க வேண்டும். இதில் நெடுஞ்சாலைக்கும் சர்வீஸ் சாலைக்கும் நடுவில் தடுப்புகள், 3 அடி உயரத்தில் அமைய வேண்டும்.

