மருதுபாண்டியர் 223 வது நினைவு நாள் திருப்புத்துாரில் ஏராளமானோர் அஞ்சலி
மருதுபாண்டியர் 223 வது நினைவு நாள் திருப்புத்துாரில் ஏராளமானோர் அஞ்சலி
ADDED : அக் 24, 2024 07:55 PM

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில், மருதுபாண்டியர் 223 வது நினைவு நாளை முன்னிட்டு, அரசு சார்பில், மருதுபாண்டியர் நினைவகத்தில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பிரிட்டிஷாருக்கு எதிராக போரிட்டு, துாக்கிலிடப்பட்டவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களது நினைவு நாளை முன்னிட்டு, வாரிசுதாரர் ராமசாமி தலைமையில், குருபூஜை நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தேசியக் கொடியேற்றினார். எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பங்கேற்றார். தொடர்ந்து, அரசு சார்பில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், ரகுபதி, பெரியகருப்பன், மூர்த்தி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, ராஜா ஆகியோர் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், விஸ்வநாதன், மணியன், ராஜூ, பாஸ்கரன், கோகுலஇந்திரா, காமராஜ், எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்நாதன், ராஜன் செல்லப்பா, பா.ஜ., சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியநாதன், மாவட்ட பொதுச் செயலர் முருகேசன், மாவட்ட செயலர் சேதுசிவராமன், அ.ம.மு.க. பொதுச் செயலர் தினகரன், காங்., சார்பில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மாங்குடி எம்.எல்.,ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, அருணகிரி, கம்யூ., சார்பில், ஒன்றிய செயலர் முருகேசன், இந்திய கம்யூ., சார்பில், முன்னாள் எம்.எல்.ஏ.,குணசேகரன், இந்திய யூ.மு.லீக் நிர்வாகி ஹதர் அலி அம்பலம் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.