ADDED : மே 06, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கடந்த நான்கு மாதங்களில், 2.29 லட்சம் கடல் ஆமை குஞ்சுகள், பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இந்த ஆண்டு, சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர மாவட்டங்களில், 3.19 லட்சம் கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இதிலிருந்து தற்போது வரை, 2.29 லட்சம் கடல் ஆமை குஞ்சுகள், பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் கடலுார் மாவட்டங்களில் தான் கடல் ஆமை முட்டைகள் அதிகமாக சேகரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, 2019 - 20ம் ஆண்டை விட, நான்கு மடங்கு அதிகமாக, தற்போது கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.
இவ்வாறு கூறினார்.