ADDED : மார் 14, 2024 11:50 PM
மதுரை : தமிழகத்தில் வருவாய்த்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய்த்துறையில் 1995 முதல் கிராம உதவியாளர்கள் முழுநேர ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியிடங்களில் பல காலியானாலும் 2006 வரை பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அதன்பின் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. தற்போது மூன்றாண்டுகளுக்கு மேல் காலியாக கிடக்கும் பணியிடங்களை நிரப்ப அரசு (ஆணை எண் 97) மார்ச் 11ல் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சென்னையில் 20 பணியிடங்கள், மதுரை- 155, திண்டுக்கல் - 29, தேனி- 25, ராமநாதபுரம் - 29, சிவகங்கை- 46, விருதுநகர்- 38 பணியிடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 2299 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கடந்தாண்டு கிராம உதவியாளர்களை பல்வேறு மாவட்டங்களிலும் தேர்வு செய்து நியமனம் செய்தனர். மதுரையில் பணி நியமனம் தொடர்பாக புகார்கள் எழுந்தன. அடிப்படை பணியாளர் தேர்வாணையம் அமைத்து அந்த அமைப்பின் மூலம் பணிநியமனம் செய்தால் முறைகேடுகளை தவிர்க்கலாம்.

