தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 23 உழைப்பாளர் நலக்கூடங்கள் திறப்பு

 23 உழைப்பாளர் நலக்கூடங்கள் திறப்பு

 23 உழைப்பாளர் நலக்கூடங்கள் திறப்பு


ADDED : மார் 06, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை பெரியார் நகர், சைதாப்பேட்டை, மதுரை, கோவை, திருச்சி பொன்நகர், மன்னார்புரம், திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், கூடுவாஞ்சேரி, நாமக்கல், விழுப்புரம் என, 23 இடங்களில், 9.31 கோடி ரூபாய் மதிப்பில், உழைப்பாளர் நலக்கூடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

இவற்றை நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர், செங்கல்பட்டு மாவட்டம் தையூரில், இரண்டு முதியோர் இல்லங்கள் கட்டப்பட்டு உள்ளன.

செய்யாறு அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு, 6.30 கோடி ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திருவாரூர் - வண்டாம்பாலை; துாத்துக்குடி - ஏரல்; திருச்சி - மணப்பாறை ஆகியவற்றில், மூன்று தொழிற் பயிற்சி நிலைய கட்டடங்கள் கட்ட, முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சி.வி.கணேசன், சுப்பிரமணியன், மகேஷ், தலைமை செயலர் முருகானந்தம், தொழிலாளர் நலத்துறை செயலர் வீர ராக ராவ் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us