வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க 24 மணி நேரமும் சோதனை
வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்க 24 மணி நேரமும் சோதனை
ADDED : மார் 12, 2024 02:28 AM

கூடலுார்: லோக்சபா தேர்தல் முடியும் வரை வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தமிழகம் - கேரளா எல்லையில் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபட தேக்கடியில் நடந்த இரு மாநில கூட்டுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேக்கடியில் தேனி கலெக்டர் சஜீவனா, இடுக்கி கலெக்டர் ஷீபா சார்ஜ் தலைமையில் இரு மாநில கூட்டுக்குழு கூட்டம் நடந்தது. தேனி எஸ்.பி., சிவப்பிரசாத், இடுக்கி எஸ்.பி., விஷ்ணு பிரதீப் முன்னிலை வகித்தனர்.
வாக்காளர்களுக்கு கொடுக்க கணக்கில் வராத பணம், பரிசுப் பொருட்கள், மதுபானம் கடத்தலை தடுக்க எல்லையில் தீவிரமாக கண்காணிக்கவும், ஓட்டுப்பதிவு நாட்களில் இரட்டை ஓட்டுப்பதிவை தடுக்க எல்லைப்பகுதியை மூடவும், இரு மாநில போலீசார் மற்றும் அதிகாரிகள் கூட்டாக இணைந்து சோதனை மேற்கொள்ளவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இரு மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிப்.,19ல் தேனி, இடுக்கி எஸ்.பி.,க்கள் தலைமையிலான இரு மாநில போலீசாரின் கூட்டுக் குழு கூட்டம் நடந்தது.

