ADDED : செப் 29, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி ' தமிழகத்தில் மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தற்போது 17 மாவட்டங்களில் அதிக மக்கள் தொகை உள்ள 24 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா 3 பேரூராட்சிகள், கோவை, நாமக்கல் மாவட்டத்தில் தலா 2, மற்ற 13 மாவட்டங்களில் தலா ஒரு பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்த்தப்பட உள்ளன.
புதிதாக உருவாகும் நகராட்சிகளுடன் 24 கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி பேரூராட்சி, தேனியில் உத்தமபாளையம் பேரூராட்சி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.