ADDED : மார் 03, 2024 04:52 AM
தமிழகத்தில் உள்ள, 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களின் வாயிலாக, 32,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. ரேஷன் கடை ஊழியர்கள் மாலை, 6:00 மணிக்கு மேல் வீடு வீடாக சென்று, கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்யும்படி நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். இதை கைவிட வேண்டும்.
பயிர் கடன் வழங்கியதில் விதிமீறல் என்று கூறி, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால சலுகை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதை கைவிட வேண்டும்; ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 11ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பின், கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், 25ம் தேதி முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
- காமராஜ் பாண்டியன்
பொதுச்செயலர்,
தமிழக தொடக்க கூட்டுறவு வங்கி
அனைத்து பணியாளர் சங்கம்.

