தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரயில்களில் அபாய சங்கிலி இழுத்த 2,618 பேர் கைது

ரயில்களில் அபாய சங்கிலி இழுத்த 2,618 பேர் கைது

ரயில்களில் அபாய சங்கிலி இழுத்த 2,618 பேர் கைது


ADDED : மார் 21, 2024 02:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2024 02:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை,:தெற்கு ரயில்வேவெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாதுகாப்பு பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, ரயில் ஓட்டுனர் மற்றும் பாதுகாவலரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ரயில்களில் அபாய சங்கிலிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அபாய சங்கிலியை தவறாக பயன்படுத்துவதால், ரயில்களின் இயக்க நேரம் பாதிக்கப்படுகிறது.

இந்த விதி மீறல்களுக்கு ரயில்வே சட்டத்தின்படி, தண்டனை அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையோ அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப் படலாம்.

நடப்பு நிதியாண்டில் இதுவரை, தெற்கு ரயில்வேயில் அபாய சங்கிலி இழுத்தல் தொடர்பாக, 2,632 வழக்குகள் பதிவாகியுள்ளன.

இதில், 2,618 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து, 15 லட்சத்து, 45,165 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us