6.11 லட்சம் ரேஷன் கார்டில் 27.75 லட்சம் பெயர் நீக்கம்
6.11 லட்சம் ரேஷன் கார்டில் 27.75 லட்சம் பெயர் நீக்கம்
ADDED : ஏப் 09, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடப்பு பருவத்தில், 3,393 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை, 3.83 லட்சம் விவசாயிகளிடம், 29.46 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 7,186 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 19.62 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், புதிய கார்டுகள் வழங்கப்படும்.
இதுவரை, 6.11 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு, 27.75 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 16.10 லட்சம் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள், முன்னுரிமை கார்டுகளாக வகை மாற்றப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், வெளி மாநிலங்களில் இருந்து, இங்கு வந்து பணிபுரியும், 15.78 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
- சக்கரபாணி
உணவுத்துறை அமைச்சர்

