ADDED : ஏப் 06, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதையடுத்து, மண்டபம் வரை இயக்கப்பட்ட ரயில்கள், இன்று முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுகின்றன.
குறிப்பாக, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கான்ட் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் ஷ்ரத்தா சேது விரைவு ரயில், பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயில் உட்பட 28 ரயில்கள், ராமேஸ்வரம் வரை நீட்டிக்கப்படுகின்றன.
அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து மண்டபம் வரை இயக்கப்பட்ட ரயில் ராமேஸ்வரத்திற்கு இயக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று எழும்பூரில் இருந்து புறப்பட்ட ரயில், இன்று காலை 8:10 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். அங்கிருந்து மாலை 5:30 மணிக்கு எழும்பூருக்கு ரயில் புறப்படும்.

