ADDED : அக் 06, 2025 02:12 AM
வானுார்: கிளியனுார் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் போலீசார் நேற்று அப்பகுதி ஏரிக்கரை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டியில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில், புதுச்சேரி சாராய பாக்கெட்டுகள் இருந்தன. விசாரணையில், அவர் நல்லாவூர் பகுதியை சேர்ந்த பழனிவேல், 43; என்பதும், புதுச்சேரி மாநிலம் லிங்காரெட்டிப்பாளையம் சாராயக் கடையில் இருந்து சீல் போடாமல் சாராய பாக்கெட்டுக்களை வாங்கி வந்து தமிழகப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து பழனிவேல் அளித்த தகவலின் பேரில், லிங்காரெட்டிப்பாளையத்தில் சீல் இல்லாமல் சாராயம் விற்பனை செய்த வானுார் அடுத்த சேமங்கலத்தை சேர்ந்த சங்கர், 34; புதுச்சேரி சந்தைபுதுக்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை, 58; ஆகிய இருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடம் இருந்து, 180 மில்லி லிட்டர் கொண்ட 302 சாராய பாக்கெட்டுகள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்காடு, அக். 6--
பாலக்காடில் ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ், தீப்பிடித்து எரிந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு பஸ் ஸ்டாண்டிலிருந்து, நேற்று மாலை, 5:30 மணிக்கு, 50 பயணியருடன் அரசு பஸ் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தது.
கோவை - -கொச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திரநகர் என்ற பகுதியில் சென்ற போது, பஸ்சின் முன் பக்கத்திலிருந்து திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது.
இதை கண்ட டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்தி, பயணியரை வெளியே இறக்கினார்.
அப்பகுதி மக்கள், பஸ் ஊழியர்கள், பயணியர் சேர்ந்து தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை அணைத்ததால், அசம்பாவிதம் நடக்கவில்லை.
தகவலறிந்து பாலக்காடு டவுன் தெற்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்ப டுத்தியது.
கேரள மாநிலம் பாலக்காடு சந்திரநகர் என்ற பகுதியில், பாலக்காட்டில் இருந்து கோவைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் முன்புறம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.