ADDED : செப் 06, 2025 01:15 AM
சென்னை:கேரளா மாநிலம் ஆலப்புழாவில் இருந்து, சென்னை வழியாக ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் செல்லும் ரயில் உட்பட, மூன்று ரயில்களின் சேவையில், நாளை மாற்றம் செய்யப் பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
சேலம் ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட சில இடங்களில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
l ஆலப்புழா - தன்பாத் காலை 6:00 மணி ரயில், நாளை போத்தனுார் வழியாக இயக்கப்படுவதால், கோவை செல்லாது
l கேரள மாநிலம் எர்ணாகுளம் - கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு, காலை 9:30 மணி இன்டர்சிட்டி விரைவு ரயில், போத்தனுார் செல்வதால், கோவை செல்லாது
l திருநெல்வேலி - சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர், அதிகாலை 1:25 மணி ரயில், நாளை போத்தனுார், இருகூர் வழியாக செல்வதால் கோவை செல்லாது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.