UPDATED : நவ 22, 2024 09:57 PM
ADDED : நவ 22, 2024 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம் அருகே பஸ்சும் லாரியும் மோதிக் கொண்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டம் மெட்டாலா கோரையாற்று பாலத்தில் பஸ் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி, பஸ் ஓட்டுநர், பெண் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பஸ்சில் இருந்து இவர்கள், ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை, அமைச்சர் மதிவேந்தன், கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.