sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ 3 வனப்பகுதி மேம்பாட்டுக்கு புதிய மேலாண்மை திட்டம்

3 வனப்பகுதி மேம்பாட்டுக்கு புதிய மேலாண்மை திட்டம்

3 வனப்பகுதி மேம்பாட்டுக்கு புதிய மேலாண்மை திட்டம்


ADDED : டிச 15, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 12:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நீலகிரி, திருப்பூர், விழுப்புரத்தில், சர்வதேச அங்கீகாரம் பெற்ற வனப்பகுதிகளை மேம்படுத்த, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணிகளை, வனத் துறை துவக்கி உள்ளது.

நீலகிரி மாவட்டம், லாங்வுட் சோலை காடு, பாரம்பரிய சிறப்புமிக்க பகுதியாக உள்ளது. இங்கு, 286 ஏக்கர் பரப்பளவில், பாரம்பரிய சோலை காடுகள் உள்ளன.

இப்பகுதியின் சூழலியல் தன்மையை பாதுகாக்க, தமிழக வனத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதேபோன்று, திருப்பூரில் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம், 308 ஏக்கரில் அமைந்துஉள்ளது. இங்கு பறவை கள் வருகை அதிகரித்து உள்ள நிலையில், இதற்கான மேம்பாட்டு பணிகளுக்கு, வனத் துறை திட்டமிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், கழிவேலி பகுதி, 12,728 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அரிய வகை பறவைகள் வந்து செல்வதால், இப்பகுதி, பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று பகுதிகளும், சர்வதேச அளவிலான ராம்சார் இடங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, இப்பகுதிகள் மேம்பாட்டுக்காக, ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

இதற்கான ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகள் துவங்கி உள்ளதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று, நீலகிரி மாவட்டம், முதுமலை தேசிய பூங்கா மற்றும் யானைகள் முகாம் ஆகியவற்றை மேம்படுத்த விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகளும் துவங்கி உள்ளதாக, வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us