பெற்ற மகள் அடித்து கொலை பெற்றோர் உட்பட 3 பேர் கைது
பெற்ற மகள் அடித்து கொலை பெற்றோர் உட்பட 3 பேர் கைது
ADDED : மார் 18, 2024 01:25 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே பட்டவாரப்பள்ளியை சேர்ந்த பிரகாஷ் மகள் ஸ்பூர்த்தி, 16; பாகலுார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.
கடந்த, 15 இரவு பாகலுார் ஏரியில் உடலில் காயங்களுடன் சடலமாக மிதந்தார். போலீஸ் விசாரணையில், மாணவியை அடித்துக் கொன்று, சடலத்தை ஏரியில் வீசியது தெரிந்தது.
ஸ்பூர்த்தியை காதலித்த சிவா, 25, என்ற வாலிபர் கடந்த, 2022ல் திருமணம் செய்யும் நோக்கில், அவரை கடத்திச் சென்றதால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அதன் பின் சிறையிலிருந்து வெளியே வந்த சிவாவுடன், மாணவியின் காதல் தொடர்ந்தது.
இது தெரிந்து ஆத்திரமடைந்த அவரது தந்தை பிரகாஷ், 37, தாய் காமாட்சி, 33, பெரியம்மா மீனாட்சி, 36, ஆகியோர் கடந்த, 15ம் தேதி அதிகாலை, ஸ்பூர்த்தியை அடித்துக் கொலை செய்தனர். உடலை சாக்கு பையில் கட்டி, பைக்கில் எடுத்துச் சென்று, ஏரியில் வீசி விட்டு வந்தனர்.
போலீஸ் விசாரணையில் இவர்களின் குற்றம் தெரிய வந்ததை அடுத்து, பிரகாஷ், காமாட்சி, மீனாட்சி ஆகியோரை, பாகலுார் போலீசார் நேற்று கைது செய்தனர்.

