UPDATED : அக் 23, 2026 01:47 AM
ADDED : அக் 23, 2026 01:44 AM
வேலுார்: வேலுாரில், போதை மாத்திரைகள் வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலுார் ஆர்.எஸ்.நகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக வேலுார் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த, 3 பேரிடம் விசாரித்தனர்.
அதில் ஓட்டேரி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ், 23, பாகாயத்தை சேர்ந்த விஜய், 22, மற்றும் வேலுார் ஆர்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த, 18 வயது வாலிபர் ஆகியோர் என தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களை சோதனை செய்த போது, போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிமிடருந்து, 35 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களுக்கு போதை மாத்திரைகளை வினியோகம் செய்த பாகாயம் பகுதியைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
