/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!
/
கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் பலி!
ADDED : ஜன 26, 2026 08:10 PM

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கடலில் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் கடல்நீரில் மூழ்கி பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தூத்துக்குடி தாளமுத்து நகர் மொட்டை கோபுரம் கடல் பகுதியில் பள்ளி விடுமுறையை ஒட்டி வீட்டில் கபடி விளையாடுவதாக சொல்லிவிட்டு அங்குள்ள கடலில் 3 மாணவர்கள் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருந்த போது அவர்கள் ஆழமான பகுதிக்குச் சென்றதாக தெரிகிறது.
இதில் 3 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

