உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 05, 2026 04:30 AM

அ நிறம் | அளவு
சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை எழும்பூர் - சோழன் உட்பட மூன்று ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
எழும்பூர் - திருச்சி, காலை 8:00 மணி சோழன் விரைவு ரயில் இன்று, 12, 14, 21, 26, செப்., 2ம் தேதிகளில், கடலுார் துறைமுகம், விருத்தாசலம் வழியாக இயக்கப்படுவதால், சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் செல்லாது
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் - மன்னார்குடி ரயில், மாலை 4:50 மணி ரயில் போக்குவரத்தில், வரும் 6, 20, 27ம் தேதிகளில், ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படும்
திருச்சி - எழும்பூர், பகல் 12:10 மணி ரயில், வரும் 11, 28ம் தேதிகளில் பகல் 12:45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளளது.
