ADDED : பிப் 13, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:துணை கலெக்டர்கள் 30 பேர், ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பத்துார் ஆர்.டி.ஓ., ராஜசேகரன், திருவண்ணாமலை மாவட்டம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை கலால் உதவி கமிஷனர் வரதராஜன், திருப்பத்துார் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மேலாளராக இருந்த கோவிந்தராஜ், அரியலுார் ஆர்.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுபோல, மாவட்ட வழங்கல் அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் என, பல்வேறு பணிகளில் இருந்த, 28 துணை கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை, வருவாய் துறை செயலர் அமுதா வெளியிட்டுள்ளார்.