ADDED : நவ 03, 2025 12:47 AM
சென்னை: பதிவுத்துறையில், மாவட்ட பதிவாளர்களாக இருந்த, 30 பேர், பதவி உயர்வு அடிப்படையில் உதவி ஐ.ஜி.,க்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக பதிவுத்துறை, 64 பதிவு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு பதிவு மாவட்டத்திலும், ஒரு நிர்வாக மாவட்ட பதிவாளர், ஒரு தணிக்கை மாவட்ட பதிவாளர் இருப்பர்.
வருவாய் மாவட்ட தலைநகரங்களில் உள்ள நிர்வாக மாவட்ட பதிவாளர் இடங்கள், உதவி ஐ.ஜி., நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டன. ஆனால், இதில் பெரும்பாலான இடங்களில் உதவி ஐ.ஜி.,க்கள் இல்லை.
இதனால், மாவட்ட பதிவாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில், உதவி ஐ.ஜி., யாக பதவி உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 30 மாவட்ட பதி வாளர்களுக்கு, உதவி ஐ.ஜி., யாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இவர்களுக்கான புதிய பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், ஏற்கனவே இருந்த ஆறு உதவி ஐ.ஜி.,க்கள், 11 மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

