ஹோட்டலில் டிரைவர்களுக்கு தங்குமிட வசதி விதிகளை திருத்தியும் அமலுக்கு வரவில்லை விதிகளை திருத்தியும் அமலாகவில்லை
ஹோட்டலில் டிரைவர்களுக்கு தங்குமிட வசதி விதிகளை திருத்தியும் அமலுக்கு வரவில்லை விதிகளை திருத்தியும் அமலாகவில்லை
ADDED : நவ 03, 2025 12:42 AM
சென்னை: தங்கும் வசதியுள்ள விடுதிகளில், கார் டிரைவர்களுக்காக தனி இடவசதியை ஏற்படுத்துவதற்காக, பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பெருநகரங்கள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், தங்குமிட வசதியுடன் விடுதிகள் செயல்படுகின்றன. இந்த விடுதிகளுக்கு, கார்கள், வேன்களில் மக்கள் வருவது வழக்கம்.
கிடைப்பதில்லை அவர்கள் தங்களுக்கான அறைகளை, கட்டணம் செலுத்தி பெற்று தங்கிச் செல்கின்றனர். அவர்கள் வரும் வாகனங்களின் டிரைவர்களுக்கு, முறையான தங்குமிட வசதி கிடைப்பதில்லை.
இதனால், வாகனத்திலேயே டிரைவர்கள் துாங்கும் நிலை ஏற்படுகிறது.
இதன் காரணமாக, மறுநாள் அவர்கள் வாகனம் ஓட்டும் போது, விபத்து உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதை கருத்தில் வைத்து, தங்குமிட விடுதிகளில், டிரைவர்களுக்கு உரிய இடவசதி செய்து கொடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, தங்குமிட வசதியை எவ்வாறு ஏற்படுத்துவது என்பதில் குழப்பம் நிலவியது. இதற்கு தீர்வாக, பொது கட்டட விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இந்த திருத்தத்தின் அடிப்படையில், விடுதிகளுக்கான திட்ட வரைபடத்தில், ஒரு கார் நிறுத்துமிடத்துக்கு ஒரு டிரைவர் தங்குமிடம் அல்லது விடுதியில் எட்டு படுக்கைக்கு ஒரு டிரைவர் தங்குமிடம் அமைக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
விடுதிகள் கட்டுமிடங்களில், இதற்கான இடவசதி இருக்காது என்று கூறப்படுவதால், 2,500 சதுர அடி சுற்றளவுக் குள், டிரைவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்தலாம் என்றும், பொது கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
முடங்கியது இது குறித்து, கட்டட அமைப்பியல் வல்லுனர் பி.பாலமுருகன் கூறியதாவது:
இந்த திருத்தத்தின் அடிப்படையில், முறையாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை, யார் கண்காணிப்பது என்ற கேள்வி எழுந்து உள்ளது.
பெரும்பாலான விடுதிகளில், இன்னும் இதன்படி டிரைவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதை யார் கண்காணிப்பது என்பதை அரசு உறுதி செய்யாததால், அரசு நல்ல நோக்கத்தில் செய்த நடவடிக்கை அமலுக்கு வராமல் முடங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

