நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகளிர் விடியல் பயணம் வாயிலாக, நான்கு ஆண்டுகளில், 675 கோடி, 98 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனால், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம், 1,200 ரூபாய் மிச்சமாகிறது என, ஒரு தனியார் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.
கடந்த 2024- - 25ம் ஆண்டு, 1,536 கோடி ரூபாயை ஒதுக்கி, 3,000 புதிய பஸ்கள் வாங்க உத்தரவிட்டதில், 1,210 பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 2025- - 2026ம் ஆண்டுக்கு 3,000 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன. போக்குவரத்து ஊழியர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் குறித்து, பலகட்ட பேச்சு நடந்துள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்த பின் நடக்கும் பேச்சில் இறுதி செய்யப்படும்.
-சிவசங்கர்
போக்குவரத்து துறை அமைச்சர்

