ADDED : டிச 05, 2025 03:33 AM

'போக்குவரத்து துறையில் விரைவில், 3,000 பேருக்கு வேலை வழங்கப்படும்,'' என, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
திருச்சியில் நேற்று அவர் கூறியதாவது:
பள்ளி, கல்லுாரிகளுக்கு தேவையான கூடுதல் பஸ் வசதியை ஏற்படுத்தி தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தேவைப்படும் இடங்களில் புதிய பஸ்கள் இயக்கப்படும். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களால், பள்ளி, கல்லுாரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள 85 பள்ளிகளின் மாணவ - மாணவியர் பயன்பெறும் வகையில், 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடைந்ததும், மாதந்தோறும் மின்கட்டணம் கணக்கீட்டு முறை செயல்படுத்தப்படும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, விரைவில், 3,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -: '

