ADDED : நவ 04, 2025 07:10 AM

நம் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு போன்றவற்றை, கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில், அரசு பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை, 2024 - 25ம் ஆண்டு குறைந்துள்ளது. அரசு பள்ளிகளை விட, 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கடந்த 2020 - 21ல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, 4.15 லட்சம் என்ற அளவில் இருந்தது. தற்போது, 2024 - 25ம் ஆண்டு, 3.60 லட்சமாக குறைந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில், 208 அரசு பள்ளிகள் மற்றும் அரசு சார்ந்த 1,204 பள்ளிகளில், மாணவர் சேர்க்கையே இல்லை. தமிழகத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத, 311 அரசு பள்ளிகள் உள்ளன. தமிழகத்தின், ஆரம்ப கல்வி நிலை இப்படித்தான் உள்ளது.
- ராமதாஸ்
நிறுவனர், பா.ம.க.,

