UPDATED : மே 21, 2025 06:57 AM
ADDED : மே 21, 2025 06:26 AM

சென்னை: 'நீதிமன்றங்களில் ரவுடிகள் மீதான வழக்குகளில், தீவிர கவனம் செலுத்தியதால், கடந்த 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு தண்டனை பெறப்பட்டு உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:
பருந்து என்ற செயலி வாயிலாக, தமிழகத்தில் உள்ள ரவுடிகள் குறித்த முழு தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் அன்றாட செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன.
சிறையில் உள்ள ரவுடிகள் எத்தனை பேர், மாநிலம் முழுதும் தினமும் ஜாமினில் வெளி வரும் ரவுடிகள் எத்தனை பேர் என, கணக்கெடுப்பு நடத்தி, உளவுத்துறை போலீசார் வாயிலாக கண்காணித்து வருகிறோம்.
சிறைகளில் சதி திட்டம் தீட்டப்படும் என்பதால், அங்கேயும் ரவுடிகளை கவனித்து வருகிறோம். நீதிமன்றங்களில், ரவுடிகள் மீதான வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது.
தாமதமின்றி வழக்கு விசாரணைக்கு வேண்டிய ஆவணங்களை தாக்கல் செய்தல், தவறாது சாட்சி களை ஆஜர் செய்வது போன்றவற்றால், 16 மாதங்களில் 329 ரவுடிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அவர்களில் 150 பேருக்கு, 10 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேற்பட்ட சிறை தண்டனை கிடைத்துள்ளது.