sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"இ-பிக்சிங்'; தேர்தலுக்காக தொண்டரிடையே சூப்பரா நடக்குது

/

"இ-பிக்சிங்'; தேர்தலுக்காக தொண்டரிடையே சூப்பரா நடக்குது

"இ-பிக்சிங்'; தேர்தலுக்காக தொண்டரிடையே சூப்பரா நடக்குது

"இ-பிக்சிங்'; தேர்தலுக்காக தொண்டரிடையே சூப்பரா நடக்குது


ADDED : அக் 11, 2011 11:06 PM

Google News

ADDED : அக் 11, 2011 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிரிக்கெட் விளையாட்டில் நடக்கும் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) போல், தேர்தல் விளையாட்டிலும் 'இ-பிக்சிங்' (எலெக்ஷன் பிக்சிங் - தேர்தல் சூதாட்டம்) ஜோராக நடக்கிறது. தேர்தல் முடிந்ததும் தீபாவளி வருவதால் பண்டிகையை 'சூப்பரா' கொண்டாடுவதற்காக ஆடு, மாடு, கோழி, புறாக்களை வைத்து பந்தயம் நடத்துகின்றனர்.லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெறும் வேட்பாளர் யார்? என, தொண்டர்கள் தங்களிடையே பந்தயம் செய்து கொள்வதுண்டு. தீவிர தொண்டர்கள் சிலர், தன் கட்சி வெற்றி பெற்றால், மொட்டை எடுத்து வேண்டுதல் நிறைவேற்றுவர். தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், மாலை அணிந்து விரதம் இருப்பது போன்றவையும் அடங்கும். இப்படி தேர்தல் 'ஜூரம்' தொண்டர்களை தொற்றிக்கொள்ளும்.

சுழன்று சுழன்று...: உள்ளாட்சி தேர்தல் உள்ளூர்காரர், உறவினர், நண்பர் என ஒரே வட்டத்திற்குள்ளேயே நடக்கும் என்பதால் கிராமங்களில் இளைஞர் பட்டாளம் 'விறுவிறு சுறுசுறு' என, களத்தில் நின்று 'சுழன்று சுழன்று' தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும், தீபாவளி வருவதால் பண்டிகையை 'சூப்பரா' கொண்டாடுவதற்காக தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.

உள்ளாட்சி தேர்தலில் 'இ-பிக்சிங்' எனப்படும் 'தேர்தல் சூதாட்டம்' முதலிடம் பிடித்துள்ளது. 'விரலுக்கு ஏற்ப வீக்கம்' என்ற அடிப்படையில், வெற்றி அல்லது தோல்வி அடையும் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், தங்களின் வருமானத்திற்கு ஏற்ப தங்களுக்குள் ஒரு 'புல்'மது பாட்டில், கோழி பிரியாணி, கறி விருந்து, ரூ.500 முதல் ரூ.1,000 அல்லது அதற்கு மேல் என பந்தயம் கட்டியுள்ளனர். ஆடு, மாடு, கோழி, புறாக்களை வைத்தும் பந்தயம் நடத்துகின்றனர். மறைமுகமாக, வாய்மொழியாக நடக்கும் இவ்வகை சூதாட்டத்தை கட்டுப்படுத்தவோ அல்லது தடுத்து நிறுத்தவோ போலீசாரால் முடியாது என்கின்றனர் கிராமவாசிகள்.






      Dinamalar
      Follow us