தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஐ.சி.எப்., ஆலையில் 3,405 பெட்டிகள் தயாரிப்பு

 ஐ.சி.எப்., ஆலையில் 3,405 பெட்டிகள் தயாரிப்பு

 ஐ.சி.எப்., ஆலையில் 3,405 பெட்டிகள் தயாரிப்பு


ADDED : ஏப் 07, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த நிதியாண்டில், சென்னை ஐ.சி.எப்., ஆலையில் மொத்தம் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இது, முந்தைய ஆண்டை விட 13.2 சதவீதம் அதிகம்.

இது குறித்து, ஐ.சி.எப்., வெளியிட்ட அறிக்கை: இந்திய ரயில்வேயில், ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஐ.சி.எப்., ஆலை முன்னோடியாக செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில், 80,000வது ரயில் பெட்டி கடந்த பிப்ரவரி மாதம் தயாரிக்கப்பட்டு, உலக சாதனை படைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் வந்தே பாரத், அம்ரித் பாரத் வகை ரயில் பெட்டிகளுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதற்கிடையே, 2025 - 26ம் நிதியாண்டில் மொத்தம் 3,405 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இது, 13.2 சதவீதம் வளர்ச்சி. முந்தைய ஆண்டில், 3,007 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. ஐ.சி.எப்., பொது மேலாளர் சுப்பா ராவ், ஐ.சி.எப்., அதிகாரிகள், ஊழியர்களின் பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்து, இனிப்பு வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us