"இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்": ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் பேட்டி
"இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்": ஜார்க்கண்ட் கவர்னர் ராதாகிருஷ்ணன் பேட்டி
ADDED : ஜூன் 12, 2024 05:54 PM

ஈரோடு: 'ஐந்தாவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும்' என ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, கோட்டை ஈஸ்வரன் கோயிலில் நடந்த பா.ஜ., நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின், கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
சில பேருக்கு சில ஆசைகள். சில பேருக்கு நாட்டின் நலன் மீது மட்டுமே ஆசை. எது வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நினைத்திருக்கிறார்களோ அது வெற்றி பெற்றிருக்கிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டு உழைக்கும் பிரதமராக மோடி உள்ளார்.
அதனால் தான் மூன்றாவது முறையாக, மக்கள் அவரிடம் நம்பிக்கை வைத்து ஆட்சியை அளித்து உள்ளனர். ஐந்தாவது பொருளாதார நாடாக இருக்கும் இந்தியா, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது பொருளாதார நாடாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.