"கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது": துரைமுருகன் உறுதி
"கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது": துரைமுருகன் உறுதி
ADDED : பிப் 17, 2024 04:43 PM

சென்னை: 'கர்நாடகாவால் மேகதாது அணை கட்ட முடியாது' என நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேகதாது அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட துறையினரின் அனுமதி பெற்று அணை கட்டப்படும் எனவும் கர்நாடக பட்ஜெட் தாக்கலின்போது அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட, மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கொண்டு வந்த போது நாங்கள் எதிர்த்தோம். கர்நாடக அரசு எந்த கமிட்டி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் தமிழக அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்,
இ.பி,எஸ்.,கண்டனம்
இது குறித்து இ.பி.எஸ்., எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடகா அரசுக்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடகா அரசின் செயல்பாடுகளை திமுக அரசு வேடிக்கை பார்க்கிறதா?.
மேகதாதுவில் அணை கட்டினால் 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. டெல்டா மாவட்ட விளைநிலங்கள் நீரின்றி பாலைவனமாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.