ADDED : ஜூலை 13, 2011 01:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவாரம் : கேரளாவிற்கு கழுதைகளில் மணல் கடத்திய கும்பலை, போலீசார் பிடித்தனர்.
தேனி மாவட்டம் தேவாரத்திலிருந்து, சாக்குலூத்து மெட்டு பாதை வழியாக, கழுதைகளில் அரிசி கடத்துவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில்,தேவாரத்தை சேர்ந்த பெத்து, மணிகண்டன் உட்பட ஆறு பேர், 82 கழுதைகளை மலைப்பாதையில் ஓட்டி வந்தனர். கழுதைகளை சோதனையிட்டதில், மணல் மூட்டைகளை கட்டி, கேரளா கொண்டு செல்வது தெரிந்து, மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.