ADDED : அக் 05, 2024 12:56 AM
தொழில் நிறுவனங்களுக்கு
ரூ.3,650 கோடி கடன்
ஈரோடு, அக். 5-
ஈரோடு மாவட்ட அளவிலான குறு, சிறு, நடுத்தர தொழில் வசதியாக்கல் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசியதாவது:
மாவட்டத்தில், 85,000க்கும் மேற்பட்ட உத்யம் பதிவு பெற்ற குறு, சிறு, நடுத்தர உற்பத்தி சேவை, வியாபாரம் சார்ந்த நிறுவனங்கள் இயங்குகின்றன.
இந்நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு இந்நிதியாண்டு இலக்காக, 9,521.34 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இலக்கை அடைய அனைத்து வங்கிகளும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கடன் வசதியாக்கல் மற்றும் லோன் மேளா நடத்தி வருகிறது.
முதல் காலாண்டு முடிவில், 3,650 கோடி ரூபாய் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்நிதியாண்டின் இலக்கை அடைய அனைத்து வங்கிகளின் பங்களிப்பையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பல்வேறு திட்டங்கள் மூலம், 28 நிறுவனங்களுக்கு, 69.93 கோடி ரூபாய் கடன் அனுமதி ஆணை வழங்கப்பட்டது.