ADDED : ஆக 02, 2025 02:48 AM
சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தனது மூன்றாம் கட்ட பிரசார பயணத்தை, ஆக., 11ம் தேதி துவக்குகிறார்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், தேர்தல் பணிகளை துவக்கியுள்ள பழனிசாமி, 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், கடந்த ஜூலை 7ம் தேதி முதல், சட்டசபை தொகுதி வாரியாக, மக்களை சந்தித்து வருகிறார். இரண்டாம் கட்ட பிரசார பயணத்தை, ஆக.,8 ம் தேதி நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், மூன்றாம் கட்ட பயணத்தை, ஆக., 11ம் தேதி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொகுதியில் துவக்குகிறார்.
அன்று தளி, ஓசூர், வேப்பனஹள்ளி; 12ல் கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை; 13ல் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி; 14ல் ஆம்பூர், குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய தொகுதிகளுக்கு செல்கிறார்.
பின்னர், ஆக.15ல், ஆரணி, செய்யார், வந்தவாசி; 16ல் செங்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை; 18ல் கலசபாக்கம், போளூர், அணைக்கட்டு; 19ல் காட்பாடி, வேலுார், ஆற்காடு; 20ல் ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம்; 21ல் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிகளிலும்ஆக. 22ல் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர்; 23ல் சோழிங்கநல்லூர், திருப்போரூர் ஆகிய தொகுதிகளிலும் பழனிசாமி பிரசாரம் செய்ய இருப்பதாக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.