ADDED : மார் 31, 2026 04:58 AM

அ நிறம் | அளவு
சென்னை : தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில், வெயில் 100 டிகிரி பாரன்ஹீட், அதாவது 38 டிகிரி செல்ஷியசை கடந்தது.
அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, ஈரோடு, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
