கோவையில் 4 நாட்கள் நடக்கிறது 'ஷாப்பிங் திருவிழா': ஆக., 15 முதல் 'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி
கோவையில் 4 நாட்கள் நடக்கிறது 'ஷாப்பிங் திருவிழா': ஆக., 15 முதல் 'தினமலர்' 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி
ADDED : ஆக 09, 2024 05:36 AM

கோவை: 'தினமலர்' நாளிதழ் சார்பில், கோவை மக்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும், 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில், வரும், 15 முதல், 18 வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் சத்யா நிறுவனம் இணைந்து வழங்கும் இக்கண்காட்சியில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த அரங்குகள் உட்பட, 300க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
சமையலறை பொருட்கள் முதல் 'டிவி', பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என, உங்களது தேவை எதுவாக இருந்தாலும், அவற்றை வாங்குவதற்கான அத்தனை அரங்குகளும் இடம் பெற்றிருக்கும்.
ஒரே கூரையின் கீழ்...
கண்காட்சி வரும், 15ம் தேதி (வியாழக்கிழமை) துவங்கி, 18ம் தேதி (ஞாயிறு) வரை நான்கு நாட்கள், கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடக்கிறது.
குடும்பத்தோடு வந்து கண்காட்சியை பார்வையிட்டு, வீடு மற்றும் உங்களுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிச் செல்லலாம். குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்பும் பொருட்களை தேர்ந்தெடுத்து, 'பர்சேஸ்' செய்யலாம்.
நீங்கள் வைத்திருக்கும் டிரஸ்களுக்கு மேட்சிங்காக அணிவதற்கு மேட்சிங் கம்மல், வளையல் தேர்ந்தெடுக்கலாம். உங்களின் அழகை மெருகூட்டும் டிரஸ் மெட்டீரியல்ஸ், பேன்ஸி அயிட்டங்கள் அத்தனையும் ஒரே கூரையின் கீழ் வாங்கலாம்; உங்கள் விருப்பத்துக்கேற்ற டிசைன்களை தேர்வு செய்யலாம்.
மேலும், கிச்சன் அயிட்டங்கள், பூஜையறை அலங்கரிக்கும் பொருட்கள், இன்டீரியர் டெக்கரேசன், ஹோம் தியேட்டர், சோபா, கட்டில், மெத்தை, டைனிங் டேபிள், மிக்சி, கிரைண்டர், ஊஞ்சல், பீரோ, ஸ்மார்ட் போன், அலங்கார மின் விளக்குகள் என வீட்டுக்கு என்னென்ன பொருடகள் வாங்கலாம் என, இப்போதே எழுதி வைத்து காத்திருங்கள்.
உங்கள் வீட்டு குட்டீஸ்கள் குதுாகலிக்க, 'கிட்ஸ் ஜோன்' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒட்டகச் சவாரி, சிக்குபுக்கு ரயில், குழந்தைகளுக்கான நீர் விளையாட்டு, குட்டீஸ் பைக், குட்டீஸ் ஜீப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் செல்லக்குழந்தைகள் பொழுதுபோக்க வசதி இருக்கும்.
அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் இக்கண்காட்சி அமைந்திருக்கும்; சலுகை விலைகளில் பொருட்கள் வாங்கும் வகையில் ஏராளமான 'ஆபர்'கள் கிடைக்கும்.
'கமகம' உணவு திருவிழா
'எங்களுக்கு எந்த ஸ்பெஷலும் இல்லையா' என, உணவுப்பிரியர்கள் கேட்கலாம்; அவர்களுக்காகவே உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கமகமக்கும் வகை வகையான உணவு வகைகளை சுவைக்கலாம். மட்டன், சிக்கன் பிரியாணியில் ஆரம்பித்து கோலா, பீட்சா, பர்கர், கொரியன் உணவு வகைகள், மேற்கத்திய உணவு வகைகள், நவதானிய மாவில், 99 வகையான தோசை, சிறுதானிய இனிப்பு ரகங்கள், கருப்பட்டி அதிரசம், சிறுதானிய மதிய உணவு மற்றும் சிற்றுண்டிகள், மைசூர் இட்லி, மதுரை பன் பரோட்டா, இளநீர் பாயாசம் என உணவுகளை ருசிக்கலாம். போண்டா, வடை, பஜ்ஜி, சிப்ஸ், ஐஸ்கிரீம், குல்பி போன்ற வகைகளும் கிடைக்கும்.
'தினமலர்' நடத்தும் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சிக்கு வந்தால், 'ஷாப்பிங்' செய்வது மட்டுமின்றி, குடும்பத்தோடு கலகலப்பாக பொழுதையும் கழித்து வரலாம் என்பதற்கு, நாங்கள் 'கியாரண்டி'. அந்தளவுக்கு, 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ', வெகுச்சிறப்பாக இருக்கும்.