சென்னை - யஷ்வந்த்பூர் உட்பட 4 விரைவு ரயில்கள் சேவை ரத்து
சென்னை - யஷ்வந்த்பூர் உட்பட 4 விரைவு ரயில்கள் சேவை ரத்து
ADDED : அக் 02, 2024 01:07 AM
சென்னை:ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - யஷ்வந்த்பூர் உட்பட நான்கு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கர்நாடகா மாநிலம் யஷ்வந்த்பூர் - சென்னை சென்ட்ரல், இரவு 10:45 மணி ரயில் வரும், நவ., 1, 8, 15, 22, 29 டிச., 6, 13, 20, 27, 2025 ஜன., 3, 10, 17, 24, 31, பிப்., 7, 14, 21, 28, மார்ச் 7, 14, 21, 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
சென்னை சென்ட்ரல் - யஷ்வந்த்பூர் இரவு 11:30 மணி ரயில், வரும் நவ., 2, 9, 16, 23, 30, டிச., 7, 14, 21, 28, 2025 ஜன., 4, 11, 18, 25, பிப்., 1, 8, 15, 22, மார்ச் 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
யஷ்வந்த்பூர் - புதுச்சேரி இரவு 8:45 மணி ரயில், வரும் நவ., 1, 8, 15, 22, 29, டிச., 6, 13, 20, 27 2025 ஜன., 3, 10, 17, 24, 31 பிப்., 7, 14, 21, 28, மார்ச் 7, 14, 21, 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
புதுச்சேரி - யஷ்வந்த்பூர் இரவு 7:15 மணி ரயில் வரும் நவ., 2, 9, 16, 23, 30, டிச., 7, 14, 21, 28, 2025 ஜன., 4, 11, 18, 25 பிப்., 1, 8, 15, 22, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

