ADDED : பிப் 18, 2024 07:06 AM
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த கலையநல்லுார் காட்டுக்கொட்டகையை சேர்ந்தவர் விஜயகுமார், 40; பெயின்டர். இவரது மகன் சந்தோஷ், 14; தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு பள்ளி சென்ற சந்தோஷ் மாலை வீடு திரும்பவில்லை. பள்ளியில் விசாரித்த போது, அவர் பள்ளிக்கே செல்லவில்லை என, தெரியவந்தது.
சந்தோஷின் நண்பர்களான உடன் படிக்கும் வடதொரசலுார் சேட்டு மகன் சாமுவேல், 14, தியாகதுருகம் கரீம்ஷா தக்கா ரபீக் மகன் அஷ்ரப், 14, அவ்வையார் தெரு, செல்வம் மகன் பெருமாள், 14, ஆகியோரும் மாயமானது தெரியவந்தது.
தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் ஒரே நாளில் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.