தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/4 காலத்தோடு போட்டியிடும் ஹோராலஜி

4 காலத்தோடு போட்டியிடும் ஹோராலஜி

4 காலத்தோடு போட்டியிடும் ஹோராலஜி


UPDATED : அக் 16, 2026 05:17 PM

ADDED : அக் 16, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:17 PM ADDED : அக் 16, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நேரத்தை அளவிடுவது, கடிகாரங்களை உருவாக்குவது மற்றும் அவற்றை வடிவமைப்பது குறித்த முழுமையான படிப்பே ‘ஹோராலஜி’.

கிரேக்க மொழியில் 'ஹோரா' என்றால் நேரம் என்றும், 'லாகோஸ்' என்றால் ஆய்வு என்றும் பொருள். இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்று, கடிகாரங்களை உருவாக்கும் மற்றும் பழுதுபார்பவர்கள் ஹோராலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.

மனித நாகரிகத்தின் தொடக்கத்திலிருந்தே நேரத்தைக் கணக்கிடும் ஆர்வம் இருந்து வந்துள்ளது. சூரியனின் நிழலை வைத்து நேரத்தைக் கணித்த சூரியக் கடிகாரம், மணல் கடிகாரம் மற்றும் நீர்க் கடிகாரங்கள் மூலமாக இந்த அறிவியல் மெல்ல உருவானது.

அதன் பின்னர், 14ம் நூற்றாண்டில் இயந்திரக் கடிகாரங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, 16ம் நூற்றாண்டில் பாக்கெட் கடிகாரங்களும், முதலாம் உலகப் போரின் போது கைக்கடிகாரங்களும் பயன்பாட்டிற்கு வந்தன. இன்று மிகத் துல்லியமாக இயங்கும் குவார்ட்ஸ் மற்றும் டிஜிட்டல் கடிகாரங்கள் வரை இந்தத் துறை தொடர்ச்சியாகப் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகிறது.

பணி



ஒரு ஹோராலஜிஸ்ட்டின் வேலை வெறும் கடிகாரப் பழுது பார்ப்பது மட்டுமில்லை. இயந்திரக் கடிகாரங்களின் நுண்ணிய கியர்கள், ஸ்பிரிங்குகள் மற்றும் பாகங்களை மைக்ரோஸ்கோப் உதவியுடன் ஆராய்ந்து சரிசெய்வது இவர்களின் முக்கிய பணி.

பழங்கால வரலாற்றுச் சிறப்புமிக்க கடிகாரங்களை மீட்டெடுப்பது, ஆடம்பர பிராண்டுகளின் புதிய கடிகார மாடல்களை வடிவமைப்பது, உடைந்த பாகங்களை லேத் இயந்திரங்கள் மூலம் சொந்தமாகத் தயாரிப்பது எனப் பல வேலைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.

இதைத் தவிர, கடிகாரங்களில் உள்ள தூசிகளை நீக்கி, சரியான அளவில் லூப்ரிகண்ட் எண்ணெய் விட்டு, ஒவ்வொரு வினாடியும் துல்லியமாக இயங்குவதை இவர்கள் உறுதி செய்கிறார்கள்.

படிப்பு

பள்ளிக் கல்வியை முடித்த மாணவர்கள், இயந்திரவியல் பட்டத்தை பெற்று இந்தத் துறைக்குள் நுழையலாம். ஹோராலஜிக்கான பிரத்யேக பட்டயப் படிப்புகள், சான்றிதழ் படிப்புகள் உள்ளன. அனுபவம் வாய்ந்த வல்லுநர்களிடம் பயிற்சி பெறுவது இத்துறையில் மிக முக்கியமானது.

மிகச் சிறிய பாகங்களைக் கையாளத் தேவையான பொறுமை, கூர்ந்த பார்வை, கைகளின் நிலைத்தன்மை மற்றும் நுட்பமான இயந்திரப் புரிதல் ஆகியவை ஒரு சிறந்த மாணவருக்கு அவசியமான திறன்களாகும்.

ஸ்மார்ட் வாட்ச்கள் புழக்கத்திற்கு வந்தாலும் கூட, பாரம்பரிய மெக்கானிக்கல் மற்றும் சொகுசு கைக்கடிகாரங்களுக்கான மதிப்பு உலக அளவில் குறையவே இல்லை.

ரோலக்ஸ், ஒமேகா போன்ற சர்வதேச ஆடம்பர வாட்ச் பிராண்டுகள், அருங்காட்சியகங்கள், நகை நிறுவனங்கள் மற்றும் பிரத்யேக சர்வீஸ் மையங்களில் திறமையான நிபுணர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. வழக்கமான பாதையைத் தவிர்த்து வித்தியாசமான துறையில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us