தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/general 3 நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்தும் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்

general 3 நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்தும் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்

general 3 நிறுவன செயல்பாடுகளை மேம்படுத்தும் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்


UPDATED : அக் 16, 2026 05:17 PM

ADDED : அக் 16, 2026 05:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 05:17 PM ADDED : அக் 16, 2026 05:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரித்து, வீண் விரயங்களைக் குறைக்கும் மிக முக்கியமான துறையாக விளங்குவது 'இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்'.

மனித ஆற்றல், இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் தகவல்களை ஒருங்கிணைத்து ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதே இத்துறையின் பணி.

படிப்பு



இத்துறையில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மைப் பாடங்களாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். பெரும்பாலான முன்னணி கல்லூரிகளில் பொதுப் பிரிவில் குறைந்தபட்சம் 50 முதல் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.

முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ., மெயின் மற்றும் ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வுகளை எழுதலாம்.

இவை தவிர தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலமாகவும், பிற மாநிலங்களில் நடக்கும் மாநில அளவிலான நுழைவுத்தேர்வுகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் நடத்தும் பிரத்யேகத் தேர்வுகள் மூலமாகவும் பி.இ., அல்லது பி.டெக்., இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் படிப்புகளில் சேர முடியும்.

நான்கு ஆண்டுகள் கொண்ட இளநிலைப் பட்டப்படிப்பில் உற்பத்தி திட்டமிடல், தரக் கட்டுப்பாடு, எர்கோனாமிக்ஸ் எனப்படும் பணிச்சூழலியல், சப்ளை செயின் மேனேஜ்மென்ட், ஆப்ரேஷன்ஸ் ரிசர்ச் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதைத் தவிர, இளநிலைப் படிப்பை முடித்த பிறகு, கேட் தேர்வு எழுதி ஐ.ஐ.டி., என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் எம்.இ., அல்லது எம்.டெக்., படிக்கலாம்.

வேலை வாய்ப்பு



படிப்பு முடிந்தவுடன் உற்பத்தி ஆலைகள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், இ–காமர்ஸ் தளங்கள், மற்றும் மென்பொருள் நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பிராசஸ் இன்ஜினியர், குவாலிட்டி அனலிஸ்ட், பிளாண்ட் மேனேஜர், சப்ளை செயின் அனலிஸ்ட் போன்ற பதவிகளில் தொடக்க நிலையிலேயே நல்ல ஊதியத்துடன் கூடிய பணிகளைப் பெறலாம். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க, உயர் பதவிகளை மிக எளிதாக எட்ட முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us