உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே ராஜேஸ்வரி, 45, என்பவரை தாக்கி, தங்க செயினை பறித்துச்சென்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர், உறவினருடன் டூ – வீலரில் அபிராமத்தில் இருந்து, சொந்த ஊருக்கு சென்றார். கண்ணாத்தான் அருகே மர்ம நபர்கள் சிலர், டூ – வீலரை வழிமறித்து, உறவினரை விரட்டிவிட்டு ராஜேஸ்வரியை கத்தியால் தாக்கி, கழுத்தில் இருந்த நான்கரை சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.
அபிராமம் போலீசார், இலந்தைகுளம் சக்திவேல், 18, ஜெயகிருஷ்ணன், 22, நாகமுனீஸ்வரன், 26, குணா, 21, ஆகியோரை கைது செய்தனர்.
