சென்னையின் 4 எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
சென்னையின் 4 எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
ADDED : மே 11, 2026 02:23 AM
சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றது. பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற விஜய் முதல்வராக பதவி ஏற்றார்.
இதைத்தொடர்ந்து தி.நகரில் வெற்றி பெற்ற ஆனந்த், வில்லிவாக்கத்தில் வெற்றி பெற்ற ஆதவ் அர்ஜுனா, மயிலாப்பூரில் வெற்றி பெற்ற வெங்கடரமணன், எழும்பூரில் வெற்றி பெற்ற ராஜ்மோகன் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
சென்னையில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்ற நான்கு பேருக்கு, அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. கொளத்துார் தொகுதியில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்ற வி.எஸ்.பாபுவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
நாமக்கல், ஈரோடு, விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.,க்க ளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
