ADDED : அக் 03, 2025 03:14 AM
திருப்பத்துார்: மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்த கணவன் உட்பட, 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருநெல்வேலியை சேர்ந்தவர் அல்போன்ஸ், 35. கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.பி.அக்ரஹாரம் பகுதியில் மிக்சர் கம்பெனி வைத்துள்ளார்.
இவரிடம், அதே பகுதியை சேர்ந்த பவன்குமார், 19, பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கும், அல்போன்ஸ் மனைவி சத்யாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
அல்போன்ஸ் கண்டித்ததால், 4 மாதத்திற்கு முன், வேலையில் இருந்து நின்று விட்டு, திருப்பத்துார் மாவட்டம், குரிசிலாப்பட்டு அடுத்த தோட்டிகுட்டை கிராமத்தில், பாட்டி வீட்டில் பவன்குமார் தங்கியிருந்தார். இருப்பினும், சத்யாவும், பவன்குமாரும் மொபைல்போனில் அடிக்கடி பேசி, தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
ஆத்திரமடைந்த அல்போன்ஸ் தன் நண்பர்கள் 4 பேருடன் சென்று நேற்று முன்தினம் பவுன்குமாரை, கத்தியால் குத்தி கொலை செய்தார்.
குரிசிலாப்பட்டு போலீசார், பெங்களூரு தப்பிச்சென்ற அல்போன்ஸ் மற்றும் நண்பர்கள், பாக்கியராஜ், 39, கதிர்வேல், 35, பால பொன்னையன், 37, ஆகிய 4 பேரை, நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.