அதிகாலை பயணத்தில் விபரீதம்: அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி
அதிகாலை பயணத்தில் விபரீதம்: அரசு பஸ் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாப பலி
UPDATED : ஏப் 13, 2025 03:44 PM
ADDED : ஏப் 13, 2025 08:58 AM

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே அதிகாலை 3.30 மணிக்கு காரும், அரசு பஸ்சும், நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நள்ளிரவு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
திருவண்ணாமலை அருகே நேற்று இரவு காரும், அரசுப் பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சோமாசிபாடி அடுத்த காட்டுக்குளம் பகுதி அருகே அதிகாலை 3:30 மணிக்கு நடந்துள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த புதுச்சேரியை சேர்ந்த, சைலேஷ், சதீஷ் குமார், ஸ்டாலின், சாருஷ் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இரவு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
இரவு நேரங்களில் பயணம் செய்தால் விபத்துக்கு வாய்ப்புகள் அதிகம்.டிரைவர் ஒரு சில வினாடி கண் அசந்தாலும் இது போன்ற விபத்துக்கள் நேரிடலாம் என்பதற்கு இந்த விபத்து எடுத்துக்காட்டு. விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.