ADDED : அக் 01, 2024 05:51 AM
சென்னை : ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, மேட்டுப்பாளையம் - கோவை உட்பட நான்கு ரயில்களின் சேவையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
போத்தனுார் - மேட்டுப்பாளையம் மாலை 3:30 மணி, மேட்டுப்பாளையம் - கோவை மாலை 4:45 மணி ரயில்கள் வரும் 24ம் தேதி ரத்து செய்யப்படுகிறது
மேட்டுப்பாளையம் - போத்தனுார் மதியம் 1:05, போத்தனுார் - மேட்டுப்பாளையம் மாலை 3:30 மணி ரயில்கள் வரும் 27ம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
ஒரு பகுதி ரத்து
ஈரோடு - செங்கோட்டை மதியம் 2:00 மணி ரயில் வரும் 7, 9, 12, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28ம் தேதிகளில் திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்
செங்கோட்டை - ஈரோடு அதிகாலை 5:00 மணி ரயில் வரும் 8, 10, 13, 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29ம் தேதிகளில் திண்டுக்கலில் இருந்து காலை 11:15 மணிக்கு இயக்கப்படும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.