தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் சிக்கினர்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் சிக்கினர்

வழிப்பறியில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் சிக்கினர்


UPDATED : அக் 18, 2026 05:29 PM

ADDED : அக் 18, 2026 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 05:29 PM ADDED : அக் 18, 2026 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, புதுப்பட்டினம் பைபாஸ் பகுதியில், அக்., 9ம் தேதி, நின்றுகொண்டிருந்த ரெட்டிப்பாளையம் சுதர்சன் என்பவரிடம், கத்தியை காட்டிய மிரட்டி, அவரது பைக்கை மர்ம நபர்களை பறித்து சென்றனர்.

சுதர்சன் புகாரில், தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர். சம்பவ நடந்த பகுதியில் ‘சி.சி.டி.வி’ கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர்கள் சிலர், இரவு நேரங்களில் சுற்றி வருவதை உறுதி செய்தனர்.

நேற்று முன்தினம் இரவு, ரோந்துப்பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைபாஸ் பகுதியில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளான லோகநாதன், 26, அஜய், 25, திவாகர், 25, பட்டுக்கோட்டை தர்ஷன், 26, ஆகியோர் என தெரியவந்தது.

தொடர் விசாரணையில்: ம் தேதி, சுதர்சனிடம் பைக்கை வழிப்பறி செய்தவர்கள் என்பது உறுதியானது. நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, ஒரு பைக் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us