ADDED : ஜூன் 19, 2025 10:57 PM
சென்னை:டாடா குழுமத்தின் பெருமைமிகு தயாரிப்பான, 'தநைரா' சேலைகளுக்கு, முதல் முறையாக 40 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
'தநைரா' சேலைகள் விற்பனை, 2024- - 25ம் நிதியாண்டில் 30 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில், திருமண ஷாப்பிங் என்பது கொண்டாட்டமாக மாறியுள்ளது.
இவற்றை கருத்தில் வைத்து, 2025- - 26ம் நிதியாண்டை வரவேற்க, 'தநைரா' தயாராகி வருகிறது. 'நைரா' வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதால் உருவாகி இருக்கும் உற்சாகம், மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துகொள்ள, சிறப்பு தள்ளுபடியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
சேலைகள், ரெடிமேட் ஆடைகள், தைக்கப்படாத குர்தா செட்கள், பண்டிகை காலங்களில் அணியும் லெஹங்காக்கள் உட்பட, தநைராவின் பல்வேறு வகை தயாரிப்புகளுக்கு, 40 சதவீத தள்ளுபடி கிடைக்கும். நாடு முழுதும் 41 நகரங்களில் உள்ள 80 'தநைரா' விற்பனை நிலையங்களில், இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும்.
தள்ளுபடி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய 'தநைரா கஸ்டமர் எக்ஸ்பீரியன்ஸ்' பிரிவு தலைவர் ஜஸ்வந்த் தாமஸ், “தநைராவின் பல்வேறு வகை தயாரிப்புகளுக்கு, 40 சதவீதம் தள்ளுபடி வழங்குவது, இதுவே முதல்முறை.
''இது வாடிக்கையாளர்களுக்கு, உண்மையிலேயே சிறப்பான அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு 'தநைரா' விற்பனை நிலையமும், சேலை பிரியர்களுக்கான சொர்க்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார்.