தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 401 நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு

 401 நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு

 401 நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு


ADDED : செப் 13, 2026 11:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 11:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, செப். 14-

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செய்து வருகிறது. நடப்பு கொள்முதல் பருவத்தில், சன்ன ரக நெல் குவிண்டால் 2,750 ரூபாய்க்கும், சாதாரண ரகம் 2,600 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 11ம் தேதி வரை, தஞ்சாவூர், திருவாரூர், கடலுார், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலுார், செங்கல்பட்டு, ஈரோடு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி மற்றும் திருச்சி மாவட்டங்களில், முதல்கட்டமாக 401 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

இவற்றில்,7,043 விவசாயிகளிடமிருந்து 42,082 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us