தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ரூ.41,965 கோடி கடன் வாங்க அரசு முடிவு! அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ரூ.41,965 கோடி கடன் வாங்க அரசு முடிவு! அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

ரூ.41,965 கோடி கடன் வாங்க அரசு முடிவு! அமைச்சர் ஜெயக்குமார் தகவல்


UPDATED : மார் 17, 2017 02:07 AM

ADDED : மார் 16, 2017 10:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 17, 2017 02:07 AM ADDED : மார் 16, 2017 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''வரும் நிதியாண்டில், 41 ஆயிரத்து, 965 கோடி ரூபாய் வரை, கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள் ளது,'' என, நிதி அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

@Image@சட்டசபையில், நேற்று அவர், 2017 - 18ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 1.59 லட்சம் கோடி ரூபாய்; மொத்த வருவாய் செலவினம் 1.75 லட்சம் கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வருவாய் பற்றாக்குறை, ரூ.15 ஆயிரத்து, 930 கோடியாக இருக்கும்.

'உதய்' திட்டத்தில், வட்டித் தொகை செலுத்து தல், வீட்டு நுகர்வோருக்கு, 100 யூனிட் வரை, இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கூட்டுறவு கடன் தள்ளுபடி திட்டம் போன்றவற்றால், அரசுக்கு ஏற்பட்டுள்ள, கூடுதல் சுமைகளால்,

@nextcolumn@ செலவினம் அதிகரித்துள்ளது. நிதிப்பற்றாக்குறை, 2016 - 17ம் ஆண்டில், 61 ஆயிரத்து, 341 கோடி ரூபாயாக இருக்கும். இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 4.58 சதவீதம். மின்வாரிய கடன் நீங்கலாக, நிதி பற்றாக்குறை, 38 ஆயிரத்து, 526 கோடி.வரும், 2017 - 18ம் ஆண்டிற்கான, பட்ஜெட் மதிப்பீடுகளில், மூலதன செலவுகள், 27 ஆயிரத்து, 789 கோடி ரூபாய். எனவே, 2017 - 18ம் ஆண்டிற்கான, பட்ஜெட் மதிப்பீடுகளில், நிதி பற்றாக்குறை, 41 ஆயிரத்து, 977 கோடி ரூபாய்.

கடன் 3.14 லட்சம்கோடி


எனவே, வரும் நிதியாண்டில், 41 ஆயிரத்து, 965 கோடி ரூபாய் வரை, கடன் பெற உத்தேசிக்கப்பட்டுள் ளது. மின் வாரியத்திடம் இருந்து, பொறுப்பேற்றுக் கொண்ட கடனையும் சேர்த்து, 2018 மார்ச் இறுதி யில், நிகர நிலுவைக் கடன், 3 லட்சத்து 14 ஆயிரத்து 366 கோடி ரூபாயாக இருக்கும்.மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், நிலுவைக் கடன் அளவு, 20.90 சதவீதமாக இருக்கும். அனுமதிக்கப்பட்ட, 25 சதவீத அளவிற்கு உட்பட்டே, கடன் அளவு இருக்கும்.

மாநிலத்தின் கடன் அளவு, உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், அனுமதிக்கப்பட்ட அளவிற்குள், தொடர்ந்து இருந்தபோதிலும், வருவாய் பற்றாக் குறை, அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக மாகவே உள்ளது.வரும் ஆண்டில் நிதி பற்றாக் குறை, அனுமதிக்கப்பட்ட வரையறைக்குள் கட்டுப் படுத்தப்படும். மாநிலத்தின் நிதி மேலாண்மையை, @nextcolumn@வலுவான பாதையில்மீட்டுக் கொண்டு வர, அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற் கொள்ளும். இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.



வரி விதிப்பு இல்லை!


தமிழக அரசு, நேற்று தாக்கல் செய்த பட்ஜெட் டில், புதிதாக எந்த வரியும் விதிக்கப்பட வில்லை. வருவாய் பற்றாக்குறை அதிகரித்த போதும், வரிஎதுவும் உயர்த்தப்படவில்லை. புதிய வரி விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பற்றாக்குறை 'பட்ஜெட்'


அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, ஐந்தாம் முறை யாக, பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்துள் ளது. 2014 - 15ம் நிதியாண்டு கணக்குகள்படி, தமிழகத்தில், 6,407 கோடி ரூபாய், வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அடுத்த நிதியாண்டில், திருத்திய மதிப்பீடுகளின்படி, 9,481 கோடி ரூபாயானது.கடந்த ஆண்டு பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட, இடைக்கால பட்ஜெட்டில், 9,154 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஜூன் மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15 ஆயிரத்து, 854 கோடி ரூபாயாக இருந்தது. நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில், 41 ஆயிரத்து, 977 கோடி ரூபாய் பற்றாக்குறை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us